Image
இருளடங்கும் வெளி
காட்சிக் குளமை
மரம்
செடி, பூ, புல்
வாகனம் கழுவும் பணிப்பெண்
புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் துண்டு
காத்திருக்கும் வெற்றிருக்கை
முகம் தெரியாமல் யாரோ சிலர்
தார்ச்சாலையில் வாகனங்கள்
எதிரே வரும் மிதிவண்டி ஓட்டி
வேற்று மொழியில் பேச்சுக்குரல்
சிறுபிரிவு வலிப்பதாய் முத்தப் பகிர்வு
பள்ளி செல்லும் சிறுவர்கள்
பேருந்து நிறுத்தத்தில் பயணிகள்
நான் கடக்கும் வெளியில்
தினமும் காலை 6.30க்கு…
மறுமொழியொன்றை இடுங்கள்