எப்படியாவது ஒரு கவிதையெழுதிவிடவேண்டுமென்று
தனிமை கருதி
மாடிப்படியில் அமர்கிறேன்
அங்கு என் தனிமையைக் கலைக்கும் விதமாய்
என் கை தொலைபேசி துடிக்கிறது
அதில் நீதி வருகிறான்
நான் பதிலாகிறேன்
அவனும் ஒரு கவிதை சொல்கிறான்
என் கருத்தும் அவன் கவிதையை சூழ்கிறது
துண்டிக்கப்பட்ட கை தொலைபேசியும்
புகைக்கப்பட்ட சிகரெட் துண்டும்
இறந்தது போல் கிடக்கிறது
கவிதைக்கான சொல் தேடுகிறேன்
எந்தச் சொல்லும் அமையவில்லை
உனக்கும் எனக்குமான சொல்
வாழவைக்கும் சொல்
வதைக்கும் சொல்
வலிக்கும் சொல்
சாகடிக்கும் சொல்லென
எல்லாச் சொற்களும் என்னிடம் இருக்கிறது
ஆனால்
அந்த சொற்களை பயன்படுத்தத் தெரியவில்லை
சொற்கள் தான் கவிதையின் பலம்