ஜன்னலோரம்

ஆகஸ்ட் 18, 2007 at 9:09 பிற்பகல் (கவிதை)

 இன்று
வெய்யில் அதிகம் தான்  

அதன் பலனோ என்னவோ
மழை  

மழையின் சுவடுகளை
தாங்கியிருந்த செடியின் இலைகள்  

எங்கும் ஈரப்பதம்  

இருப்பினும்  இரவு வந்துவிட்டது
நிலவும் தான் 

கசியும் நிலவொளியில்
எல்லாம் அழகு தான்  

சிறு
சிறு நீர் தேக்கங்களில்
சிதறிக்கிடக்கிறது நிலவு  

நிசப்தங்களில்
முன்னுரிமைபெற்ற இரவுபூச்சிகள்
ஏதோ பேசிக்கொள்கிறது 

இந்த மௌனத்தை கலைக்கிறது
இலைகள் தாங்கிவிட்ட
மழையின் சடலங்கள் 

மழைகலந்த காற்று
என்னுள் சில்லிப்பூட்டகவிதை ஏக்கமாய்
புன்னகைக்கிறேன். 

மறுமொழியொன்றை வழங்குக

நீங்கள் எத்தகையவராக இருக்க வேண்டும் புகுபதிந்து உள்ளீர்கள் பின்னுாட்டம் இட