பிரிவின் நீட்சி
புதுப் புது அவதரிப்புகளாக
ஓவ்வொரு பயணமும்
கையசைக்கத் தாமதித்து
கலங்கிய கண்களைத் திருட்டுத்தனமாக
துடைத்துக் கொண்டும்
சிரிக்க முடிகிறதே சில சமயங்களில்
அழுகையை அடிமனதில்
அடக்கிக்கொண்டு வார்த்தை வராமல்
முகம் கோணி தலையசைத்து
விடைபெறும்போது
விருட்டெனச் சிந்தும்
சில கண்ணீர்த் துளிகள்
கவலையில் முகம் சோர்ந்து
கவலைபடாதே எனச் சொல்லும்
தோரணையில் ஒவ்வொன்றும்
உறவுக்குள்ளும் நட்வுக்குள்ளும்
மனதை விட்டுவிட்டு
வாழ்வை கோபிக்க முடியா
பட்சமாய்
தொலைவாய் சென்று
திரும்பிப் பார்க்கும் கணங்கள்
ஈரம் படாத இதழ்கள்
வறட்டுப் புன்னகையில்
கை குலுக்கி
விடை கொடுத்த முகங்கள்
அதே இடத்தில் எல்லாம்
புள்ளியாய்க் கண்ணில் கரைய
விசும்பும் இதயத்தோடு
பயண நடுவில் இமை மூடி
தூங்கும் பாவனையில்
பின் நோக்கி உருளும் நினைவுகள்
எல்லாம்
சிறு பிரிவாய் சமாதானம்
மௌனம்
வெற்றிடமல்ல
புரட்சி
தனிமையின் பலன்
ரகசியங்களின்
தடுப்புச் சுவர்
தவத்தின் நிலை
மனதின் பக்குவம்
சப்தங்களின்
எதிர்ச் சொல்
பேச்சுக்களின்
படுக்கையறை
காதலில் பிழை
இயற்கையின் மொழி
விழிகளின் படிமம்
சில நேரங்களில்
சம்மதங்களாகவும்
சமாதனங்களாகவும்
கேள்விகளாகவும்
இறைவனுக்கும்
மனிதனுக்கும் இருக்கும்
தொடர்பு
நமக்குள்…
ஒருவித சுழற்சியால் மெதுவாக
மேலெழும்புகிறது ஏதோ ஒரு தவிப்பு
இன்பமும் துன்பமும் சமநிலையில்
சில சமிக்கைகள் நிகழ்ந்த வண்ணமிருக்க
இதழ் உடுத்தாத புன்னகை
உதிர்கிறது மனதின் ஆழத்தில்
மழைப்பதத்தின் சாராலரக ஒரே சுவாசம்
ஏறி இறங்குகிறது இருவருக்குமானதாக
வெளிச்சத்தின் அரங்கத்தில்
வௌ;வேறு நிர்ணயங்களில் தரிசித்தும்
கலைகிறது முழு சாத்தியங்களுடன்
தவத்தின் நிலை
இப்படிக்கு…
வசிப்பதற்காக
வீட்டைக் கட்டியும்
முகவரி நிரந்தரமாகியும்
வாழ்வு தேடி
புதுப் புது முகவரிகளுடன்
சேமிப்புகளுக்காக
சிதறிப் போன விசுவாசங்கள்
தூரம் தூரமாய்…
பிரிவின் பாரம் சுமந்து
முரண்களுக்கு மத்தியில்
பயணித்துக் கொண்டு
வாழ்க்கை காத்திருப்பதாக
எண்ணி
வயது கடந்துகொண்டிருக்கின்றது
கனவுகள்
ஒன்றென் பின் ஒன்றாக
யாசிக்கின்றன
பல வண்ணங்களில்
அரிதாரங்களற்ற
அவதாரம் பூண்டி ஏதேச்சைகளில்
யத்தனிக்கும்
அடுத்த இலக்கில் பெறும் பகுதி
இருப்பது அறியாமல்
நகர்ந்து கொண்டே இருக்கும்
வாழ்க்கை
திரும்பிப் பார்க்கும் போது
இழப்புகளின் மிச்சம்
தேடல்களில்
எங்கோ எங்கோ…
கடைசியாய்
மௌனத்தில் உறைந்து போகும்
மூச்சுப் பை
சவப்பெட்டியில்
குத்தப்படும் நிரந்தர முகவரி
நிச்சலனமாய்
வாழ்வின் அடிவாரத்தில்
நினைவிடங்களாக
பூர்வீகம்.
யாரும் அறியாத நாம்!

உன்னை வரையும் பாக்கியம்
என் விரல்களில் காத்திருக்கின்றன.
என் உடலெங்கும்
நீயான ஓவியம்
ஓட்டப்பட்டள்ளது!
மௌனம்
உன் மொழியான போதும்
விழிகள் உரையாடிக்கொண்டே இருக்கிறது.
எனதான சொற்களை
உன்னில் நிரப்புகிறேன்.
நீ வெளிப்படுத்தாத புன்னகை – சில
ஸ்தம்பிப்புகளை திறந்துகொண்டு
என் இதழ்ஆரம் நிகழ்கிறது.
நீ வினோதங்கள் ஆகிறாய்,
நான் புன்னகையாகிறேன்
கண்முன் – ஒரு
பயணத்தை ஒப்படைக்கிறாய்.
அதைமேற்கொள்ள
பூக்களையும் பரிசளிக்கிறாய்
உன்னை தாங்கிக்கொள்ள
கரம் ஏந்துகிறேன்
நீ நழுவி
எனக்குள் விழுந்து கொண்டே இருக்கிறாய்
யாரும் அறியாத ரகசியமாய்!
மற்றுமொரு…

ஒரு முடிவு பேரிரைச்சலாகிறது
பிரிவு அல்லாது காலத்தின் கருணை
சத்தங்களால் காயப்பட்டும்
மெதுவாக படர்கிறது யாருமறியாத
மௌனம்.
வாழ்க்கையை புறம் தள்ளி
புன்னகையும் விசாரிப்புகளும்
தொலைகிறது.
சோகங்களை விழுங்கிக்கொண்டு
பரிச்சயமாகிறது இறப்பின் ஒத்திகை
மலர்வளையங்கள் போதிக்கின்றன
ஆத்மார்த்தங்களை
இறந்தவனின் முன் காலம்
நிதர்சனமாகிறது.
மரணம் நினைவுகூறுகிறது
மற்றுமொரு மரணத்தை.
Hello world!
Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!